கோவை காளியம்மன் கோவிலில் மாசி கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2026 12:03
கோவை; மாசி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் தெரு எண் - 09ல் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் காளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.