பதிவு செய்த நாள்
12
ஜன
2013
12:01
உண்மையும் உழைப்பும் இரு கண்கள் என வாழும் கன்னிராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் புதன், மாத பிற்பகுதியில் சிறப்பான பலன்களைத் தரும் வகையில் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். செவ்வாய், குரு, சுக்கிரன் தன் பங்கிற்கு நல்ல பலன்களைத் தருவர். வீடு, வாகனத்தில் தேவையான வசதி சிறப்பான வகையில் கிடைக்கும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்குகிற வகையில் விபரீத ராஜயோக பலன் உண்டாகும். பூர்வ சொத்து உள்ளவர்கள் பராமரிப்பு பணிசெய்ய, வீடுகளில் குடியிருக்க அனுமதிக்கும்போது நம்பகமானவர்களுக்கு இடம் தருவது நல்லது. வம்பு, விவகாரம் அணுகாத நல்ல வாழ்வு பெறுவீர்கள். கணவன், மனைவி குடும்ப நலன் சிறக்க தேவையான பணிகளை ஒற்றுமையுடன் நிறைவேற்றுவர். நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு சரியாகிற வகையில் சுவாரஸ்யமான புதிய நிகழ்வு ஏற்படும். தொழிலதிபர்கள் மாத துவக்கத்தில் ஓரளவு உற்பத்தியும், பிற்பகுதியில் திருப்திகரமான வளர்ச்சியும் பணவரவும் காண்பர். வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகை வழங்கி விற்பனை இலக்கில் தன்னிறைவு அடைவர். பணியாளர்கள் பணி இலக்கு நிறைவேற்ற புதிய வரையறை வகுத்து செயல்படுவர். சலுகைகள் ஓரளவு கிடைக்கும். குடும்பப் பெண்கள் குடும்பத்தின் நலனைக் கருத்தில் கொண்டு சிக்கனமாக செலவழித்து பொருள் சேர்ப்பர். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றி பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். சிலர் மீதான ஒழுங்கு நடவடிக்கையில் மாற்றம் வரும். சுய தொழில் புரியும் பெண்களுக்கு ”மாரான உற்பத்தி, ஓரளவு லாபம் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி, கிடைக்கும். விவசாயி களுக்கு மகசூல் அதிகரித்து கூடுதல் விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் உண்டு. மாணவர்கள் லட்சிய மனதுடன் படித்து, பெற விரும்பிய தேர்ச்சி விகிதம் எளிதில் பெறுவர்.
பரிகாரம்: தன்வந்திரியை வழிபடுவதால் உடல்நலம் பலம்பெறும்.
உஷார் நாள்: 18.1.13 இரவு 11.11- 21.1.13
காலை 8.41.
வெற்றி நாள்: பிப்ரவரி 4, 5, 6
நிறம்: பச்சை, நீலம் எண்: 4, 8.