கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2026 11:03
மானாமதுரை: கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் வருடம் தோறும் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று மாலை 5:00 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக மார்ச் 15ம் தேதி அழகிய நாயகி அம்மன் கோயிலிலும் கொடியேற்றம் நடைபெற்றது. விழா நடைபெறும் நாட்களின் போது சுவாமிகள் தினம் தோறும் குதிரை, பூப்பல்லக்கு, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற உள்ளது. தேரோட்டம் மற்றும் பூப்பல்லக்கு ஏப்.1ம் தேதி மாலை 4:00 மணிக்கு நடைபெற உள்ளது.