Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ... சலவாதி கிராமத்தில் இரு கோவில் கும்பாபிஷேகம்  சலவாதி கிராமத்தில் இரு கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜயநகர பேரரசு கால பழமையான அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விஜயநகர பேரரசு கால பழமையான அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

25 மார்
2026
01:03

அருப்புக்கோட்டை:  அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தில் விஜய நகர பேரரசு கால பழமையான அய்யனார் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


இந்த ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக வரலாற்று ஆர்வலர் யுவராணி கொடுத்த தகவலையடுத்து, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியர் செல்ல பாண்டியன், பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். 


இந்த சிற்பம் விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்தது என தெரிய வந்தது. இதுகுறித்து கூறியதாவது: கிராமங்களில் ஆரம்பக்காலத்திலிருந்து அய்யனார் வழிபாடு இருந்தது. இவரை ஊர் தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் மக்கள் வணங்கி வந்தனர். அய்யனார் கோவில் ஊரின் எல்லை அல்லது ஏரி கண்மாய் கரைகளில் அமைந்திருக்கும். இந்தச் சிற்பமும் ஊரின் கண்மாய் கரையில் அமைந்துள்ளது. 2 அடி உயரமும், 3 அடி அகலத்திலும் உள்ளது. சிகை அலங்காரம் ஜடபந்தம், ஜடாபாரத்துடன் காணப்படுகிறது. 2 காதுகளிலும் பத்திர குண்டலங்கள் காணப்படுகிறது. மார்பில் ஆபரணங்கள் முப்பரி நூல் இடுப்பில் உதிர பந்தம் இடுப்பையும், இடது காலையும் இணைத்து யோகப்பட்டையும் காணப்படுகிறது. தோள்களில் தோல் வளவிகளும், கைகளில் கை வளவிகளும், வலது கையில் செண்டாயுதமும், இடது கையை இடது காலின் மீது வைத்து கஜ ஹஸ்தத்திலும், வலது காலை மடித்தும் இடது காலை குத்த வைத்து, ராஜ லீலாசனத்தில் சிற்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இவரின் வலது பக்கம் மனைவி பூர்ணகலை சுகாசன கோலத்தில் உள்ளார். இடப்பக்கம் பணிப்பெண் ஒருவர் ஐயனுக்கு சாமரம் வீசிக்கொண்டு இருக்கிறார். பிற்கால சிற்பங்களில் 2 மனைவிகளோடு காட்சி தரும் ஐயன், இங்கு பல்லவர் பாணியை பின்பற்றி ஒரு மனைவியோடு காட்சி தருகிறார். பணிப்பெண் சாமரம் வீச ஐயன் ஒரு மனைவியோடு காட்சி தருவது அபூர்வமான ஒன்று. இந்த சிற்பம் 15, 16ம், நூற்றாண்டை சேர்ந்தது, என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar