Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமைச்சர் வெற்றி பெற கொளஞ்சியப்பர் ...  வாதானுார் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்  வாதானுார் வேணுகோபால சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்; பக்தர்கள் குவிந்தனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்;  பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

25 மார்
2026
05:03

 புதுச்சேரி: முதலியார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது.


முதலியார்பேட்டை – கடலுார் மெயின் ரோட்டில் பெருந்தேவி நாயிகா சமேத வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதையொட்டி, கடந்த 22ம் தேதி யஜமான சங்கல்பம், ஆசார்ய வரணம், ரித்வித் வரணம், விஷ்வக்ேஸன ஆராதனம், புண்யாஹவாசனம், ஸோமகும்ப ஸ்தாபனம், வேத பிரபந்த துவக்கம், அங்குரார்பணம், வாஸ்து சாந்தி நடந்தது. தொடர்ந்து, 23ம் தேதி காலை தீர்த்த ஸங்ரஹம், ரக் ஷாபந்தனம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை, ஜலாதிவாஸம், விமான சாயதிவாஸம், மனோன்மானசாந்தி ஹோமம், மாலை நேத்ரோன்மீலணம், கர்மாங்க திருமஞ்சனம், சதுஸ்தானார்சனம், சாற்றுமறை நடந்தது. நேற்று  (24ம் தேதி) காலை சதுஸ்தானார்சனம், ஹோமம், பூர்ணாஹூதி சாற்றுமுறை, மூலவர்கள் திருமஞ்சனம், மாலை  சதுஸ்தானார்சனம், தத்வ ஹோமம், நியாசம், சாற்றுமுறை நடந்தது.  முக்கிய நிகழ்வாக, இன்று (25ம் தேதி ) காலை விஷ்வரூபம், சதுஸ்தானார்சனம், மகா பூர்ணாஹூதி, தசதானம், கலசங்கள் புறப்பாடு, காலை 10:00 மணிக்கு விமானங்கள் கும்பாபிஷேகம், 10:30 மணிக்கு பெருமாள், தாயார் லட்சுமி ஹயக்ரீவர் மற்றும் சீதா லட்சுமண ஹனுமத் சமேத ராமச்சந்திர சுவாமி ஆகியோருக்கு கும்பாபிஷேகம், மகா தீபாராதனை, பெரிய சாற்று முறை நடந்தது. திரளான பக்தர்கள், பொதுமக்கள் தரிசனம் செய்தனர். மாலை கருட சேவை நடந்தது. விழா ஏற்பாடுகளை கவுரவ தர்மகர்தாவும், புதுச்சேரி பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரருமான ராமகிருஷ்ணன், பொதுப்பணித்துறை கிளாஸ் - 1 ஒப்பந்ததாரர ரமேஷ் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar