சுக்கிரவார்பேட்டையில் பங்குனி உத்திர விழா; முருகரிடம் மனமுருகிய பக்தர்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2026 10:04
கோவை: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நேற்று சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிஅருள் பாலித்தார்.
பங்குனி உத்திரத்தில் சூரபத்மனின் மகள் தெய்வானையை முருகப் பெருமான் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். இதை ஒட்டி சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமிக்கு, 108 திரவியங்களில்அபிஷேகம் நடந்தது. சந்தனம், விபூதி , சிகப்பு வண்ண மலர்களால்முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிகப்பு சார்த்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுந்தராபுரம் எல்.ஐ.சி., காலனி சப்தகிரி வெங்கடேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர விழா நடந்தது. கோட்டை சங்கமேஸ்வரர், பேட்டை விஸ்வேஸ்வரசுவாமி கோயிலில் முருகருக்குசிறப்பு வழிபாடுகள் நடந்தது. திரளான பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.