பங்குனி உத்திரத்தில் மத நல்லிணகம்: காவடி எடுத்து வந்த பக்தர்களுடன் இணைந்து ஆடிய முஸ்லிம்
பதிவு செய்த நாள்
02
ஏப் 2026 12:04
ராமநாதபுரம்: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அலகு குத்தியும், பால் குடங்கள், காவடிகள் எடுத்து குவிந்தனர். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில் காலையில் யாக பூஜையுடன் பால், தயிர், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபி ேஷகம் நடந்தது. குமரய்யா கோயில், வெளிப் பட்டணம் பாலசுப்பிர மணியம் சுவாமி, பாலதண்டயுத சுவாமி கோயில் மற்றும் பட்டணம்காத்தான் சேதுபதி நகர் வினை தீர்க்கும் வேலவர் கோயில், குயவன்குடி குமர குருபர ஸ்ரீசுப்பையா என்னும் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு அபிேஷகம், பூஜைகளில், பால்குடம், காவடிகளுடன் அதிகாலை 3:00 மணிக்கு பூக்குழி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூக்குழி விழா: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காலை 10:15 மணிக்கு நொச்சியூருணியில் இருந்து பால்குடம் எடுத்து வந்து மதியம் 12:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. கோயிலுக்கு செல்லும் வழியில் வண்டிக் காரத் தெரு, அக்ரஹாரத் தெரு, அரண்மனை, சாலைத்தெரு உள்ளிட்ட பல இடங்களில் நீர் மோர் பந்தல், அன்னதானம் வழங்கப்பட்டது. மத நல்லிணகத்தை பேணும் வகையில் பால் குடம், காவடி எடுத்து வந்த பக்தர்களை ஏர்வாடியை சேர்ந்த சாகுல் அமீது சாம்பிராணி புகையிட்டு வரவேற்றார். பக்தர்களுடன் இணைந்து ஆட்டம் போட்டார். தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் அன்னதானம் வழங்கினர். மருத்துவ முகாம் நடந்தது. இரவு 9:00மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
|