விதவிதமான உணவுகளை உண்ணவும், உடைகளை உடுத்தவும் மனிதன் விரும்புகிறான். ஆனால் பைபிள், ‘‘எதை சாப்பிடுவோம், எதைக் குடிப்போம், எதை உடுத்திக் கொள்வோம் எனச் சிந்திக்காதீர். ஏனெனில் இவைகளை எல்லாம் அறிவிலிகள் தேடி அலைகிறார்கள்’’ மனிதனின் சிந்தனை எவ்வாறு அமைய வேண்டும் என்றால், ‘‘எது உண்மையோ, யோக்கியமோ, நியாயமோ, துாய்மையானதோ அன்பிற்குரியதோ, நற்கீர்த்தியோ, பண்பொழுக்கமோ, போற்றுதலுக்குரியதோ அவற்றைச் சிந்தியுங்கள். இவையே நல்லவரின் அடையாளங்கள்’’ என்கிறது.