நகரி: திருப்பதி, திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில், மகர சங்கராந்தியை ஒட்டி, நேற்று பாரிவேட்டை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.கோவிலில், மார்கழி மாதத்தை ஒட்டி திருப்பாவை பாடப்பட்டு வந்தது. அதனால், தை, 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த, அதிகாலை சுப்ரபாத சேவை நேற்று முதல் மீண்டும் துவங்கியது.