தேவம்பாளையம் ஸ்ரீ மாரியம்மன் மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2026 06:04
அவிநாசி: தேவம்பாளையம் ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.
அவிநாசி அடுத்த பழங்கரை ஊராட்சியில் தேவம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா கடந்த 25ம் தேதி பூச்சாட்டுதல், கிராம சாந்தியுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் அம்மை அழைத்தால், கும்பம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல்,அலங்கார பூஜை, கம்பம் கங்கையில் விடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மஞ்சள் நீர் விழாவுடன் பொங்கல் விழா நிறைவு பெற்றது. கோவில் விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.