பழநியில் காளைகளுடன் சுவாமி தரிசனம் செய்த தாராபுரம் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2026 06:04
பழநி: பழநி கோயிலுக்கு காளைகளுடன் உடன் வந்த தாராபுரம் பக்தர்கள் முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். பழநி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு ஏராளமான வருகை புரிந்து வருகின்றனர். இன்று கோயமுத்தூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஐந்து காளைகளுடன் பரிவட்டம் கட்டி அலங்காரத்துடன் கிரிவலம் சுற்றி வந்தனர். மேளதாளத்துடன் சென்ற காளைகளை பக்தர்கள் வணங்கினர். அதன்பின் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்