இளைஞன் ஒருவன் பாதிரியாரிடம், ‘மனிதருக்கும் மற்ற உயிர்களுக்கும் என்ன வித்தியாசம்’ எனக் கேட்டான் ‘‘மற்ற உயிர்களிடம் இருந்து மனிதர்கள் விலகி விட்டனர். தம் விருப்பப்படி நினைத்ததை எல்லாம் விதவிதமாக சாப்பிடுகின்றனர். பல வடிவ ஆடைகளை உருவாக்கி வண்ணமயமாக உடுத்துகின்றனர். நிலத்தை ஆக்கிரமித்து சொந்தமாக வீடு கட்டி வசிக்கின்றனர். ஆனால் மற்றவை இப்படி நடப்பதில்லை’’ என்றார். சுயசிந்தனையும், சுதந்திரமும் மனிதனுக்கு மட்டுமே உண்டு. அதை சரியாக பயன்படுத்த வேண்டும்.