மாங்காடு சுங்கு விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2026 05:04
காஞ்சிபுரம்: மாங்காடு, சுங்கு விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலின் உபகோயிலான சுங்கு விநாயகர் கோயிலில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிலையில் மார்ச் 02ம் தேதி பாலாலயம் நடைபெற்று திருப்பணி நிறைவுற்று இன்று 6ம் தேதி காலை 9.30 மணியளவில் திருக்குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் மற்றும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து கோபுர கலசத்தில் சிவச்சார்யார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் கோயில் பரம்பரை தர்மகர்த்தா மணலி ஆர்.சீனிவாசன், வான்மதி, இணை ஆணையர், சித்ராதேவி, திருக்கோயில் துணை ஆணையர் மற்றும் அலுவலர்கள், திருப்பெரும்புதூர் சரக ஆய்வாளர், திருக்கோயில் கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டனர். இத்திருக்குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுங்கு விநாயகரை தரிசனம் செய்தனர்.