Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேர்த்திருவிழா; களைகட்டும் உடுமலை மகா மாரிக்கு  மாவிளக்கு வழிபாடு மகா மாரிக்கு மாவிளக்கு வழிபாடு
முதல் பக்கம் » துளிகள்
ஸ்ரீ மாரியம்மன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம் ‘ஓம் சக்தி;பராசக்தி’ கோஷம் முழங்க பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீ மாரியம்மன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம் ‘ஓம் சக்தி;பராசக்தி’ கோஷம் முழங்க பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

09 ஏப்
2026
11:04

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், வேத மந்திரங்கள் முழங்க, சீர் வரிசை சிறக்க அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், அம்மன் திருக்கல்யாண வைபவம் நேற்று மதியம் நடந்தது.

உற்சவருக்கு, பால், தயிர், பன்னீர், பழச்சாறு, தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், திருநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில், அம்மனுக்கும், சூலத்தேவருக்கும் சிறப்பு அபிேஷகம் நடந்தது.

பக்தர்கள், பட்டாடை, வளையல், அணிகலன்கள், இனிப்பு வகைகள், பழங்கள், திருமாங்கல்யம் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக கோவிலுக்கு, வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

தொடர்ந்து, திருக்கல்யாண நிகழ்ச்சிகள் துவங்கின. யாக குண்டம் வளர்த்தப்பட்டு, சிவாச் சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பாரம்பரிய முறையில், உரலில் மஞ்சள் இடித்து, அம்மனுக்கு பாதத்தில் வைத்து பூஜை, மாலை மாற்றுதல் நிகழ்ச்சி, பூ பந்து விளையாட்டு, திருமாங்கல்ய பூஜை என திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. பின்னர், வேதமந்திரங்கள், பஞ்ச வாத்தியங்கள் ஒலிக்க, பக்தர்களின் ‘‘ஓம் சக்தி; பராசக்தி’’ கோஷம் முழங்க, அம்மனுக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

தம்பதி சமேதரராய் ‘பச்சை பட்டு உடுத்தி’ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு மாங்கல்ய கயிறு, பிரசாதம், அன்னதானம் நடந்தது. அம்மன் திருக்கல்யாணத்தின் போது, பாரம்பரிய முறைப்படி, ஏராளமான பக்தர்கள் திருமண மொய் எழுதி வழிபட்டனர்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர், எண் கோண வடிவில் அழகாக அமைந்து, வாழ்வியல் தத்துவங்கள், ஒற்றுமை ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். பல நுாற்றாண்டுகள் பழமையான, ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், கம்பம் போடுதல் நிகழ்ச்சிக்கு பின், வேப்பிலை, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது, பக்தர்கள் உப்பு கொண்டு வந்து, பலி பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar