Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூவோடு... எடுத்து வந்தோம் வேண்டுதல் ... ஸ்ரீ மாரியம்மன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம் ‘ஓம் சக்தி;பராசக்தி’ கோஷம் முழங்க பக்தர்கள் பரவசம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கல்யாண ...
முதல் பக்கம் » துளிகள்
தேர்த்திருவிழா; களைகட்டும் உடுமலை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேர்த்திருவிழா; களைகட்டும் உடுமலை

பதிவு செய்த நாள்

09 ஏப்
2026
11:04

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், சிறப்பு அம்சமாக, திருவிழா நடக்கும் நாட்களில், கோவில் வளாகம் மற்றும் குட்டை திடலில், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் என களைகட்டும்.

அதே போல், தேர்த்திருவிழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், குட்டைத்திடலில், பிரமாண்ட ராட்டினங்கள், பொழுது போக்கு அம்சங்கள், பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரையிலான விளையாட்டு அம்சங்கள் மற்றும் நுாற்றுக்கணக்கான திருவிழா கடைகள் என, உடுமலை நகரமே களை கட்டும் விழாவாகவும், அனைத்து மதத்தினரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விழாவாக, இந்த தேர்த்திருவிழா உள்ளது.

கத்தி போடுதல் வழிபாடு

திருவிழாவில், கத்தி போடுதல் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடந்து வருகிறது.

மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், பக்தர்கள் தங்கள் உடலில், கத்தியை வைத்து, வாத்தியங்கள் முழங்க, நடனம் ஆடியபடி, கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருவது, சிறப்பானதாகும்.

பிரதான வீதிகளில், அம்மனுக்கு தங்கள் உடலை வருத்தி, நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

யானை தள்ளும் சிறப்பு கொண்ட தேர் கேரளாவிலிருந்து ‘மணிகண்டன்’ வருகை

 பக்தர்கள் முன்னே தேரின் வடம் பிடித்து இழுக்க, பின்னாலிருந்து திருத்தேரை யானை தள்ளும் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி உடுமலையில் நடக்கிறது.

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், தேரோட்டத்தின் போது, யானை பயன்படுத்துவது, இக்கோவிலின் சிறப்பாக உள்ளது. ‘ஊர் கூடி தேர் இழுக்கும்’ நிகழ்ச்சியாக, பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் தேரோட்டத்தின் போது, பக்தர்கள் முன்னால் தேர் வடம் பிடித்து இழுத்துச்செல்கின்றனர்.

பின்னால், யானை தேரை தள்ளி பக்தர்களுக்கு உதவும் காட்சி கண்கொள்ளாக்காட்சியாகவும், தமிழகத்தில் தேரோட்டத்தின்போது, யானை பயன்படுத்தும் கோவில் என்ற சிறப்பும் உள்ளது. தேர் திரும்பும் தளி ரோடு சந்திப்பு, குட்டை வீதி, சதாசிவம் வீதி, தலைகொண்டம்மன் கோவில் திருப்பம், பொள்ளாச்சி ரோடு திருப்பம் உள்ளிட்ட தேர் திரும்பும் பகுதிகளில், யானையின் பங்கு பிரதானமாக உள்ளது.

நடப்பு ஆண்டு, கேரளா மாநிலம், செர்புலசேரியிலிருந்து,மணிகண்டன் என்ற ஆண் யானை, தேரோட்டத்திற்காக வரவழைக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar