Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம் : சித்திரை ராசி பலன் மீனம் : சித்திரை ராசி பலன் மீனம் : சித்திரை ராசி பலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
கும்பம் : சித்திரை ராசி பலன்
எழுத்தின் அளவு:
கும்பம் : சித்திரை ராசி பலன்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2026
12:04

கும்பம்


அவிட்டம் 3, 4 ம் பாதம்

தவிட்டுப் பானையையும் தங்கமாக்கிடும் வல்லமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். உங்கள் சகாய, ஜீவன ஸ்தானாதிபதி செவ்வாய் மே 10 வரை, தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் உங்கள் ராசிநாதன் சனி பகவானுடன் சஞ்சரிப்பதால் எந்த ஒன்றையும் நினைத்தபடி நடத்திக்கொள்ள முடியாமல் போகும். குடும்பத்தில் ஏதேனும் ஒரு பிரச்னை இருந்து கொண்டே இருக்கும் என்றாலும், சகாய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் நிலையை மாற்றுவார். சாதாரணமாக இருந்தவர்களையும் உச்ச நிலைக்கு கொண்டு செல்வார். உங்கள் ராசியை விட்டு சனி பகவான் விலகி இருப்பதே உங்களுக்கு ஆதாயத்தை ஏற்படுத்தும். மந்த நிலையை மாற்றும். பயந்து பயந்து வாழ்ந்த நிலை இனி மாறும். சட்ட சிக்கல்கள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். தனித்துவம் வெளிப்படும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை உண்டாகும். பிள்ளைகளால் பெருமைப்படக்கூடிய அளவிற்கு அவர்களுடைய செயல்பாடுகள் இருக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை மாறும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: ஏப். 28.

அதிர்ஷ்ட நாள்: ஏப். 17, 18, 27. மே 8, 9.


பரிகாரம்: ஸ்ரீசிவசைலநாதரை வழிபட வாழ்வில் இருந்த சங்கடங்கள் விலகும்.


சதயம்

தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டு முன்னேறும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான மாதமாகும். ஜென்ம ராசிக்கும், ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகுவிற்கும் குரு பகவானின் பார்வை உண்டாவதால், நீண்டகால கனவுகள் நனவாகும். பெரிய திட்டங்கள் தீட்டி அதை முடிக்க முடியாமல் தவித்துவந்த நிலை மாறும். எதிர்ப்புகள் மறைமுகத் தொல்லைகள் என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு அந்த நிலையில் மாற்றம் ஏற்படும். அரசியல்வாதிகள், பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு தேர்தல் போட்டியிடவும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். வேலைக்காக வெளிநாடு சென்றவர்களுக்கு மனதில் நிம்மதி உண்டாகும். சிலர் சொந்த ஊரை நோக்கி வருவீர்கள். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு பணியாளர்களாலும் அந்நியராலும்  ஆதாயம் கூடும். மாதம் முழுவதும் உங்கள் சுக, பாக்ய ஸ்தானாதிபதி சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். நவீன பொருட்கள் சேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் உண்டாகும். பொதுத்தேர்வு முடிவுகள் மனதில் நிம்மதியை உண்டாக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.

சந்திராஷ்டமம்: ஏப். 28, 29.

அதிர்ஷ்ட நாள்: ஏப். 17, 22, 26. மே 4, 8, 13.


பரிகாரம்: ஸ்ரீஅகோரமூர்த்தியை வழிபட அல்லல்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.


பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்

வாழ்க்கையின் அர்த்தத்தை முழுவதுமாக தெரிந்து வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் நன்மையான மாதமாகும்.குருப் பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை இந்த மாதத்தில் நீங்கள் உணருவீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் கனவை நனவாக்குவார். இதுவரை இழுபறியாக இருந்த வேலைகளை முடிக்கும் அளவிற்கு சூழ்நிலைகள் சாதகமாகும். குருவின் பார்வைகள் உங்கள் ராசி, பாக்யம், லாப ஸ்தானங்களுக்கு கிடைப்பதால், இதுவரை மற்றவர்கள் பார்வைக்கு கேள்விக்குறியாக இருந்த நீங்கள் இனி ஆச்சரியக்குறியாக மாறுவீர்கள். இருக்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய சொத்து சேரும். பெரியோரின் ஆதரவு சேமிப்பு உயரும்.  தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். உற்பத்தி அதிகரிப்பதுடன் விற்பனையும் கூடும். பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். குடும்பத்திலும் இந்த நேரத்தில் நிம்மதி இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் தேடிவரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணத்திற்குரிய வாய்ப்புகள் உருவாகும். சிலருக்கு புதிய வீட்டில் பால் காய்ச்சும் நிலையும் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். மாணவர்களுக்கு விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: ஏப். 29, 30.

அதிர்ஷ்ட நாள்: ஏப். 17, 21, 26. மே 3, 8, 12.


பரிகாரம்: வெங்கடாஜலபதியை வழிபட வாழ்வில் நன்மைகள் உண்டாகும். வேண்டுதல் நிறைவேறும்.

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar