பதிவு செய்த நாள்
17
ஜன
2013
10:01
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருமுக்குளத்தில், சுற்று சுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் இருப்பதால், விபத்து ஏற்படுவதை தவிர்க்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளத்திலிருந்து, தினமும் தண்ணீர் எடுத்து சென்று, தாயாருக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த குளத்தில் குளித்தால், புண்ணியமாக பக்தர்கள் கருதி வருகின்றனர். இத்தகைய குளத்தில், தண்ணீர் நிரம்பிய நேரங்களில், அடிக்கடி உயிர் பலிகள் நடந்து வருகிறது. மேலும், இந்த குளத்தின் மேற்கு பகுதியில் மட்டும் சுற்றுசுவர் உள்ளது. மற்ற பகுதிகளில் சுவர்கள் கட்டப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் கிழக்கு ,தெற்கு பகுதி குளத்தின் கரைகள் ரோடு மட்ட அளவிலே உள்ளதால், சிலர் தவறி விழுந்து உயிர் பலியாவதும் நடந்து வருகிறது. தெற்கு பகுதியில் அதிகளவில் டூவீலர்களில் மக்கள் சென்று வருகின்றனர். இதனால், சில நேரங்களில் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.மேலும் பரந்து விரிந்த படித்துறைகளால் சிலர், கழிவு பொருட்களை இங்கே கொட்டி செல்கின்றனர். இதை தடுக்க, கோயில் நிர்வாகம் திருமுக்குளத்தின் கரையை சுற்றி, சுவர் எழுப்பி பகர்தகள் செல்வதற்கு வசதியாக ,இரண்டு பாதைகளை மட்டும் ஏற்படுத்தி, குளிப்பதற்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். தற்போது குளத்தில் தண்ணீர் குறைந்து வரும் நிலையில், சுற்று சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் விரும்புகின்றனர்.