* கடவுள் எப்போதும் உன் அருகிலேயே இருக்கிறார். கவலைப்படாதே. * மனம் ஒன்றி கடவுளை வழிபட்டால் நினைத்தது நடக்கும். * துன்பம் என்பது கடவுள் உனக்கு அளிக்கும் வாய்ப்பு. அதை தாங்கிக் கொள். * நம்பிக்கையுடன் செயல்படு. வெற்றி பெறுவாய். * எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் கடவுளின் நாமத்தை சொல். * முயற்சியும், உழைப்பும் இருந்தால் வாழ்வில் உயரலாம். * சுறுசுறுப்புடன் செயல்படு. மனதில் தீய எண்ணமே வராது. * கடவுள் ஒருவர் மட்டுமே உண்மை. மற்றதெல்லாம் பொய். * நல்ல மனதுடன் இரு. உலகமும் நல்லதாகவே தெரியும். * எல்லோரிடமும் அன்பாக நடந்துகொள். * இக்கட்டான சூழலில் கடவுளிடம் உதவி கேள். நிச்சயம் அவர் செய்வார். * போதும் என்ற மனதுடன் இரு. மகிழ்ச்சி தானாகவே வரும். * பக்தி இருந்தால் எந்தவொரு செயலையும் முடிக்கலாம். * பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். * நல்ல செயல்களை செய். பாவம் குறைய ஆரம்பிக்கும். * பிறரை குறை சொல்லாதே. மீறினால் அதுவே இயல்பாகி விடும். * மதம் பிடித்த யானை போன்றது மனம். அதைக் கட்டுப்படுத்து.