திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2026 11:04
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பிரம்மாண்டமான வருடாந்திர சித்திரை தேர் திருவிழா இன்று திரளான பக்தர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது.
திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் அம்மன் காலையில் பல்லக்கிலும், இரவு சிம்மம், பூதம், அன்னம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவில் 13ம் தேதி வெள்ளிக்கு திரை வாகனத்தில் அம்மன் வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.