பூங்குணம் வராகி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2026 11:04
கடலுார்: பண்ருட்டி அடுத்த பூங்குணம் வழித்துணை வராகி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பண்ருட்டி அடுத்த பூங்குணம் கிராமத்தில் உள்ள வழித்துணை வராகி அம்மன் கோவிலில், தமிழ் புத்தாண்டையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,ஆராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புத்தாண்டில் அனைத்து வளங்களும், செல்வமும் பெருகசிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 6 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.