குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் 100 வது ஆண்டு பரிவேட்டையில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2026 02:04
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், இன்று தையல் தொழிலாளர்களின் 100வது ஆண்டு பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில், இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா கடந்த 4ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. நேற்று முக்கிய தேர்திருவிழா நடந்தது. இன்று குன்னூர் தையல் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100வது ஆண்டு திருவிழா நடந்தது. இதில், காலை சந்தான வேணுகோபால் சுவாமி கோவிலில் இருந்து சீர் தட்டு ஊர்வலம் புறப்பட்டு, தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது. தொடர்ந்து, அபிஷேக ஆராதனை, பரிவேட்டை நிகழ்ச்சிகள் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல கொங்கு வேளாளர் குழுவினரின் மாவிளக்கு மற்றும் ஊர்வலம் நடந்தது. தேவாங்கர் சௌடேஸ்வரி மன்றத்தினர் நீலகிரி மாவட்ட தெலுங்கு சங்கமா சங்கத்தினர் சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தேர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.