அஞ்சுகோட்டையில் 1008 திருவிளக்கு பூஜை; பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2026 04:04
திருவாடானை: திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் உள்ள ஆதினமிளகி அய்யனார், அழகிய நாயகி அம்மன் மற்றும் ஆனிமுத்து கருப்பர் கோயில்களில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஏப்.,22 ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகளும், வழிபாடுகளும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று இரவு 1008 திருவிளக்குபூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். மே 1 ல் பூக்குழி விழா நடக்கிறது.