Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனத்தில் புஷ்ப பல்லக்கில் ... கருட வாகனத்தில் கள்ளக்குறிச்சி பெருமாள் வீதியுலா கருட வாகனத்தில் கள்ளக்குறிச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் விசாலாட்சி மற்றும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் விசாலாட்சி மற்றும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

28 ஏப்
2026
03:04

பரமக்குடி: பரமக்குடி சித்திரை திருவிழாவில் சிவன் கோயில்களில் விசாலாட்சி மற்றும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.


பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி கோயில் உள்ளது. கோயிலில் நந்தி கொடி ஏற்றப்பட்டு சித்திரை திருவிழா நடக்கிறது. ஏப்., 27 அம்மன் தபசு திருக்கோலம் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு சந்திரசேகர சுவாமி கமல வாகனத்தில் மாப்பிள்ளை திருக்கோலத்தில் உலா வந்தார். பின்னர் கோயில் முன்பு பெருமாள், ஈஸ்வரனை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்களின் வேத மந்திரத்திற்கு மத்தியில், விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.  அப்போது ஏராளமான பெண்கள் தங்களது திருமாங்கல்ய கயிற்றை மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும் 12:00 மணி தொடங்கி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி அன்னதான குழுவினர் பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. 


*இதேபோல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சந்திரசேகர சுவாமி மாப்பிளை திருக்கோலத்தில் உலா வந்தார். பின்னர் கோயில் திருக்கல்யாணம் மண்டபத்தில் மீனாட்சி அம்மன், சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரண்டு சிவன் கோயில்களிலும் சுவாமி, அம்பாள் யானை மற்றும் பூ பல்லக்கில் பட்டனப்பிரவேசம் வந்தனர். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar