ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருபாளிக்கிறார். இக்கோவிலில், சித்திரை மாத மூன்றாம் செவ்வாய் கிழமையான இன்று அதிகாலை 4:00 மணிக்கு சன்னிதி திறக்கப்பட்டு கோ–பூஜை நடந்தது. தொடர்ந்து, முலவருக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி, உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், மஞ்சள் சாமந்தி மாலை அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகத்தை தொடர்ந்து, ரத்தினாங்கி சேவை அலங்காரத்தில், மஞ்சள் சாமந்தி மலர் படிமாலை அணித்து காட்சியளித்தார். தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு உற்சவர் கோடையாண்டருக்கு கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர், உற்சவ மூர்த்திகள் கோவிலை மூன்று முறை வலம் வந்தனர்.ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் மற்றும் கோவில் அதிகாரிகாரிகள் செய்திருந்தனர்.