Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்திரை செவ்வாய்: ரத்தினாங்கி ... கோடை வெப்பத்தை தணிக்க உற்சாக குளியல் போட்ட ராமேஸ்வரம் கோயில் யானை கோடை வெப்பத்தை தணிக்க உற்சாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலமலையில் சித்ரா பவுர்ணமி தேர் திருவிழா: அனுமந்த வாகனத்தில் ரங்கநாதர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாலமலையில் சித்ரா பவுர்ணமி தேர் திருவிழா: அனுமந்த வாகனத்தில் ரங்கநாதர்

பதிவு செய்த நாள்

28 ஏப்
2026
05:04

பெ.நா.பாளையம்: பாலமலை ரங்கநாதர் கோயிலில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழாவையொட்டி பெருமாள், அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பாலமலை ரங்கநாதர் கோயில் உள்ளது. இங்கு, சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா கடந்த, 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, அன்ன வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை அனுமந்த வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். இன்று செங்கோதை அம்மன் அழைப்பு நடக்கிறது. நிகழ்ச்சியை ஒட்டி நாளை செங்கோதை அம்மன் தாயார் கோயில் வளாகத்தில் அபிஷேக பூஜை, அன்னதானம், நாயக்கன்பாளையம் கரி வரதராஜ பெருமாள் பஜனை கோஷ்டியின் நாம சங்கீர்த்தனம், வீரபாண்டி பிரிவு ஸ்ரீ ராமர் பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. தொடர்ந்து, பெரியநாயக்கன்பாளையம் பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனம், நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் பஜனை குழுவினரின் ராம சங்கீர்த்தனம், ஸ்ரீ ராமர் பஜனை குழுவினரின் ராம சங்கீர்த்தனம் நடக்கிறது. இரவு, 7:30 மணிக்கு நாயக்கன்பாளையத்திலிருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, டி.ஜி.,புதூர் சீனிவாச பெருமாள் பஜனை கோஷ்யரின் நாம சங்கீர்த்தனம், பாலமலை ரங்கநாதர் கிருஷ்ண லீலா பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரவு, 12:30 மணிக்கு பாலமலை மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடக்கிறது. அதிகாலை, 3:00 மணிக்கு தாயாரை அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. 30ம் தேதி திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியும், மே 1ம் தேதி மாலை, 5:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், 2ம் தேதி பரிவேட்டை, குதிரை வாகன உற்சவம், 3ம் தேதி சேஷ வாகன உற்சவம், தெப்போற்சவம், 4ம் தேதி சந்தன சேவை சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகள் கோயில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் தலைமையில் நடந்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar