செங்கல்பட்டு: ஆத்துாரில், ஸ்ரீ சதுர்வேத பாடசாலையின் 14வது ஆண்டு விழா இரு நாட்களுக்கு முன் நடந்தது. செங்கல்பட்டு அடுத்த, ஆத்துார் கிராமத்தில், ஸ்ரீ சதுர்வேத பாடசாலை உள்ளது. இங்கு, 14வது ஆண்டு விழா, காஞ்சிபுரம், ஏனாத்துார் ஸ்ரீ சங்கரா பல்கலைக்கழக துணை வேந்தர் சீனிவாசு தலைமையில், பாடசாலை வளாகத்தில், இம்மாதம் 27ம், தேதி நடந்தது. ராமாயண சிறப்பு ப்ரவசகர் ஸ்ரீ ரங்கன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பாடசாலை ஸ்தாபகர் ஸ்ரீ காமகோடி, தலைமை ஆசிரியர் குமரகுரு கனபாடிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில், வேத படிப்பை முடித்த 51 மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது.