Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நோய் தீர்க்கும் பீரேஸ்வரா உடுப்பியில் குகைக்குள் கணபதி கோவில் உடுப்பியில் குகைக்குள் கணபதி கோவில்
முதல் பக்கம் » துளிகள்
ஒரு ரூபாய் கொடுத்து பக்தர்களை ஆசிர்வதிக்கும் குபேர மஹாலட்சுமி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஒரு ரூபாய் கொடுத்து பக்தர்களை ஆசிர்வதிக்கும் குபேர மஹாலட்சுமி

பதிவு செய்த நாள்

05 மே
2026
11:05

பெங்களூரு ரூரல் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஜிகனி அருகே கரியப்பன தொட்டி கிராமத்தில், குபேர மஹாலட்சுமி கோவில் உள்ளது. கருவறையில் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட, ஏழு அடி உயர சிலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு, குபேர மஹாலட்சுமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பாதாள வராயி என்ற மற்றொரு பெயரும் இந்தக் கோவிலுக்கு உள்ளது. இக்கோவிலின் விசேஷம் என்னவென்றால், மற்ற கோவில்களில் கொடுப்பது போன்று உணவை பிரசாதமாக வழங்க மாட்டார்கள். அதற்கு பதிலாக குபேர மஹாலட்சுமி பாதத்தில் வைத்து, பூஜை செய்த ஒரு ரூபாயை பிரசாதமாக வழங்குகின்றனர்.

இந்த ஒரு ரூபாயை எடுத்து சென்று, வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் பண பிரச்னை ஏற்படாது என்றும், கடன் பிரச்னை நீங்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

ஒரு ரூபாயை வியாபாரம் செய்யும் இடத்தில் கல்லா பெட்டியில் போட்டால், வியாபாரம் பெருகும் என்றும் நம்புகின்றனர். லட்சுமி இதயத்தில் நாராயண் இருப்பது போன்று, சிலை வடிவமைக்கப்பட்டு இருப்பதும் இங்கு சிறப்பம்சமாக உள்ளது.

பல ஆண்டுகளாக திருமணமாகாமல் இருப்போர், இங்கு வந்து குபேர மஹாலட்சுமி கையில் வைத்து, பூஜிக்கப்படும் கயிறை வாங்கி சென்று, வீட்டில் பூஜை செய்து கட்டினால் திருமண வரன் கைகூடி வரும் என்ற நம்பிக்கையும் உள்ளது. கோவில் நடை தினமும் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை திறந்து இருக்கும்.

மேலும் தகவலுக்கு தொடர்புக்கு 94482 24846

பஸ்சில் செல்லலாம்


* பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து கரியப்பன தொட்டி 37 கி.மீ., துாரத்தில் அமைந்து உள்ளது.
* மெஜஸ்டிக், கே.ஆர்.மார்க்கெட் பஸ் நிலையத்தில் இருந்து பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல், நெலமங்களா தாலுகா, பைரஷெட்டிஹள்ளி கிராமம் கொல்லஹள்ளி பகுதியில் பைலாஞ்சநேய சுவாமி ... மேலும்
 
temple news
துமகூரு நகரில் இருந்து, 3 கி.மீ., தொலைவில், பழமையான ஷெட்டிஹள்ளி ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar