Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தோஷங்களை போக்கும் பழமையான சூரிய ... பசுமை போர்வை போர்த்தியுள்ள சீத்தாலயங்கிரி மல்லிகார்ஜுனா கோவில் பசுமை போர்வை போர்த்தியுள்ள ...
முதல் பக்கம் » துளிகள்
ஆயுள், ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மாரம்மா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆயுள், ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மாரம்மா!

பதிவு செய்த நாள்

12 மே
2026
08:05

மாண்டியா மாவட்டத்தில், மாரம்மா கோவில் உள்ளது. இது, அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகளுக்கு பிடித்தமான கோவிலாகும். மிகவும் சக்தி வாய்ந்தது.

மாண்டியாவில் அற்புதமான மாரம்மா கோவிலாக இது உள்ளது. இது, பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால், அரசியல்வாதிகள், நடிகர், நடிகையர் அவ்வப்போது வந்து செல்வர்.

இங்கு குடி கொண்டுள்ள அம்பாளுக்கு, ஆரத்தி உக்கட மாரம்மா, அஹல்யா தேவி, ஆதிசக்தி, சண்டி சாமுண்டி, கருணாமயி, அபயங்கரி, சாந்த சொரூபினி, காளிகா மோகினி, துஷ்ட சம்ஹாரிணி, தோஷ நிவாரிணி என, பல பெயர்கள் உண்டு.

இங்கு குடிகொண்ட அம்பாள், மிகவும் சக்தி வாய்ந்தவர். பக்தர்கள் வேண்டும் வரங்களை, அள்ளித்தருபவர். பில்லி, சூனிய பிரச்னை, உடல் ஆரோக்கிய பிரச்னைகளை விரட்டுவார் என்பது என்பது, பக்தர்களின் நம்பிக்கை.

மன ரீதியான பிரச்னையால் அவதிப்படுவோர், இங்கு வந்து வேண்டிக்கொண்டால், நோய் சரியாகும் என கூறப்படுகிறது.

மாரம்மாவின் மகிமையை அறிந்து, மைசூரு மஹாராஜாக்கள், இங்கு வந்து அம்பாளை தரிசித்தனர். கோவிலில் சர்வ அலங்காரத்துடன் காட்சியளிக்கும் மாரம்மாவின் விக்ரகம் மரத்தால் செதுக்கப்பட்டதாகும். இத்தகைய விக்ரகங்களை காண்பது, மிகவும் அபூர்வம்.

பல ஆண்டுகளுக்கு முன், 11 சகோதரர்கள் மீன் பிடிக்க சென்ற போது, ஆற்றில் இந்த அம்பாளின் விக்ரகம் கிடைத்தது. அவர்கள் விக்ரகத்தை கொண்டு வந்து, இங்கு பிரதிஷ்டை செய்தனர். அந்த சகோதரர்களின் குடும்பத்தினர் தினம் ஒருவராக பூஜை செய்கின்றனர்.

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில், கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கும். அமாவாசை, பவுர்ணமியில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வியாழன் அன்று அருள் கேட்கலாம்; நீங்கள் நினைக்கும் பணி நடக்குமா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கோவிலுக்கு கன்னடம் மட்டுமின்றி, தெலுங்கு நடிகர், நடிகையரும் வந்து தரிசித்து செல்கின்றனர். இங்கு வந்து மாரம்மாவை தரிசனம் செய்தால், ஆயுள், ஆரோக்கியம் விருத்தியாகும் என்பது ஐதீகம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar