Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனிக்கிழமை மட்டும் திறந்திருக்கும் ... வைகாசி விசாக நாளில் நடந்த புராண நிகழ்வுகள் வைகாசி விசாக நாளில் நடந்த புராண ...
முதல் பக்கம் » துளிகள்
1,000 ஆண்டுகள் பழமையான முக்தி நாதேஸ்வரா கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
1,000 ஆண்டுகள் பழமையான முக்தி நாதேஸ்வரா கோவில்

பதிவு செய்த நாள்

26 மே
2026
12:05

பெங்களூரு ரூரல் நெலமங்களா டவுன் பின்னமங்களாவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான, முக்தி நாதேஸ்வரா கோவில் அமைந்து உள்ளது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலில், லிங்க வடிவத்தில் முக்தி நாதேஸ்வரர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அம்மனாக பார்வதி தேவி உள்ளார்.

சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவில்களில், நுழைவாயிலிலோ அல்லது பிரகாரத்திலோ அல்லது கருவறைக்கு வெளியிலோ விநாயகர் சிலை இருப்பது வழக்கம். அதுபோன்று இந்த கோவிலில் கருவறைக்கு வெளியில் விநாயகர் சிலை உள்ளது. விநாயகரை தரிசித்த பின், சிவனை தரிசனம் செய்ய பக்தர்கள் செல்கின்றனர்.

அஷ்டதிக் பாலகர்கள் மேலும் கோவிலில் தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவர், நந்தி தேவர், நவக்கிரகங்கள் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. இக்கோவிலில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், கருவறைக்கு மேல் உள்ள கூரையில் ‘அஷ்டதிக்’ பாலகர்கள் அதாவது எட்டு திசைகளின் காவலர்கள் மற்றும் சிவசக்தி சிற்பங்கள் அழகிய கலைநயத்துடன் செதுக்கப்பட்டு உள்ளன.

கோவிலின் வெளிப்புற கல் சுவர்களில் விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி மற்றும் யானை உட்பட பல விலங்கினங்களின் சிற்பங்கள் நேர்த்தியாக செதுக்கப்பட்டு உள்ளன. கோவிலின் நுழைவாயில் பகுதியில் உள்ள, கல்வெட்டில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டு இருப்பது, சோழர் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது என்பதற்கு வரலாற்று சான்றாகவும் உள்ளது.

நந்திதேவர் அர்த்த மண்டப மேற்கூரையில் உள்ள சிவசக்தி சிற்பத்தை மனம் உருகி வேண்டி, நந்திதேவர் காதில் சென்று நம்முடைய வேண்டுதல்களை கூறினால், நந்திதேவர் சிவனிடம் கொண்டு சென்று நிறைவேற்றி கொடுப்பார் என்பதும், பக்தர்களின் அசைக்காத முடியாத நம்பிக்கையாக உள்ளது.

மகர சங்கராந்தி அன்று கருவறையில் உள்ள சிவனை, சூரிய பகவான் தரிசிப்பது அதாவது, சூரிய கதிர்கள் விழும் நிகழ்வையும் தரிசிக்கலாம். மகிஷாசூரனை வதம் செய்யும் கோலத்தில் துர்க்கை அம்மன், ஜேஷ்டா தேவி, கங்காரமூர்த்தி சிலைகளும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

ராகுதோஷம், திருமணம் தொடர்பான தடைகள், குடும்பத்தில் நீடிக்கும் நீண்ட கால பிரச்னையால் அவதிப்படுவோர், இந்த கோவிலுக்கு வந்து சிவன், துர்க்கை, சாமுண்டீஸ்வரியை வணங்கி சென்றால், அனைத்து கஷ்டங்களும் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

கோவிலின் நடை தினமும் காலை 6:30 மணி முதல் 11:00 மணி வரையும்; மாலை 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரையும் திறந்து இருக்கும்.

மஹா சிவராத்திரி, இங்கு கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை பிரதோஷ நாட்களில் முக்தி நாதேஸ்வரருக்கும், நந்தி தேவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தேவ மந்திரங்கள் முழங்க வழிபாடு நடக்கிறது.

பழமையான கோவில் என்பதால், இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar