Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ...  செஞ்சி மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்  செஞ்சி மாரியம்மன் கோவிலில் சாகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பன்னிரு திருமுறை பாராயணத்துடன் வைகாசி விசாக தேர்த்திருவிழா பூஜைகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 பன்னிரு திருமுறை பாராயணத்துடன் வைகாசி விசாக தேர்த்திருவிழா பூஜைகள்

பதிவு செய்த நாள்

27 மே
2026
06:05

 திருப்பூர்: தேர்த்திருவிழாவை முன்னிட்டு, சிவாச்சாரியார் மற்றும் பட்டாச்சார்யாரின் வேதமந்திரங்கள், ஓதுவாரின் திருமுறை பண்ணிசை பாடல்களுடன், சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழா நடந்து வருகிறது. இன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, நாளை திருக்கல்யாண உற்சவம், 30 மற்றும் 31ம் தேதிகளில் தேரோட்டம் நடைபெற உள்ளது. நேற்று காலை, சிவாச்சார்யார்கள், பட்டாச்சார்யார்களின், சிறப்பு பூஜைகளுடன், தேர்களுக்கு கலசம் பொருத்தும் வைபவம் நடந்தது. அதனை தொடர்ந்து, தேர் அலங்கார பணி துவங்கியுள்ளது. இன்று காலை, ஆனந்தவல்லி சமேத ஸ்ரீசந்திரசேகரர் மற்றும் வீரராகவப்பெருமாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். காலை, மகா அபிேஷகத்தை தொடர்ந்து, மாலையில் சிறப்பு அலங்காரபூஜைகள் நடந்தன. ஒவ்வொரு கால பூஜையின் போதும், சிவாச்சார்யார் மற்றும் பட்டாச்சார்யாரின், வேத மந்திரரங்களுடன், ஓதுவார் தியாகராஜன் குழுவினரின், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறை பதிங்கள் பண்ணிசையுடன் பாராயணம் செய்யப்படுகிறது. 

இன்று இரவு, 7:30 மணிக்கு, சோமாஸ்கந்தர் அதிகார நந்தி வாகனத்திலும், விசாலாட்சி அம்மன் யாழி வாகனத்திலும், ஸ்ரீதேவி பூதேவி சமேத வீரராகவப்பெருமாள் கற்பக விருட்ச வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  பெருமாள் கோவில் விழா மேடையில் நேற்று, சண்முகாலயா இசை நாட்டியப்பள்ளி சார்பில், ‘வைகாசியில் வைகுந்தனும், விசாகத்தில் விஸ்வேஸ்வரரும்’ என்ற இசை நடன நிகழ்ச்சி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar