பிரதமரின் மோடியின் சகோதரர் பரமக்குடியில் சுவாமி தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2026 05:05
பரமக்குடி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் உடன் பிறந்த சகோதரர் பிரகலாத் மோடி இன்று பரமக்குடியில் சுவாமி தரிசனம் செய்தார். பிரகலாத் மோடி தமிழ்நாட்டில் ஆன்மிக யாத்திரை மேற்கொண்டுள்ளார். இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தரிசனம் முடித்து, பரமக்குடி நகராட்சி அருகில் உள்ள வராகி அம்மன் கோயிலில் தரிசித்தார். அப்போது கோயில் சார்பில் கும்பமரியாதை செய்யப்பட்டது. பா.ஜ., உள்ளிட்ட இந்து அமைப்பினர் வரவேற்றனர். தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு புறப்பட்டு சென்றார்.