Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்மத்தின் அடையாளமாக ... பசியின்றி பாதுகாக்கும் அன்னபூர்ணேஸ்வரி பசியின்றி பாதுகாக்கும் ...
முதல் பக்கம் » துளிகள்
பெலகாவி மகாலட்சுமி யாத்திரையின் மகத்துவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெலகாவி மகாலட்சுமி யாத்திரையின் மகத்துவம்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2026
10:06

பெலகாவி மாவட்டம், கங்க்ராலி கிராமத்தில் ஸ்ரீமகாலட்சுமி கோவில் உள்ளது. இக்கோவிலின் முக்கிய தெய்வமாக மகாலட்சுமி இருக்கிறார். தேவியை தீய சக்திகளில் இருந்து காக்கும் தேவதையாக கிராமத்தினர் கருதுகின்றனர். இந்த கோவிலில் 42 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும், மகாலட்சுமி யாத்திரை பிரசித்தி பெற்றது.

இந்த யாத்திரை ஒன்பது நாட்கள் நடக்கும். பஞ்சம், பசி, கொடிய நோய்கள், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை பாதுகாக்க யாத்திரை நடக்கிறது. ஒன்பது நாட்களும் பிரமாண்டமாக தேரோட்டம் நடக்கும். இதில், பெரும் திரளாக பக்தர்கள் பங்கேற்பர். மஹாராஷ்டிராவை சேர்ந்த பக்தர்களும் தேரோட்டத்தில் பங்கேற்பர். அனைவரும் மஞ்சள் பொடிகளை மற்றவர்கள் மீது வீசி திருவிழாவை கொண்டாடுவர்.

இத்திருவிழா கடைசியாக 1984ல் நடந்தது. 42 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 28 முதல் கடந்த மே 6ம் தேதி வரை கோலாகலமாக நடந்தது. ஒன்பது நாட்களும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஏராளமான மராட்டியர்களும் பங்கேற்றனர். இதை பலரும் தங்கள் மொபைல் போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.

இதன் மூலம், மகாலட்சுமி யாத்திரை குறித்து இன்றைய, ‘2 கே கிட்ஸ்’களுக்கும் தெரியவந்தது. இதையடுத்து, அடுத்து எப்போது யாத்திரை நடக்கும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடம் எகிறி உள்ளது.

எனவே, கோவில் நிர்வாகத்தினர், ஊர் தலைவர்கள் ஒரு வராலற்று சிறப்புமிக்க முடிவை எடுத்து உள்ளனர். இனிமேல் 16 ஆண்டுகளுக்கு ஒரு முறை யாத்திரை நடத்த திட்டமிட்டு உள்ளனர். எல்லை பகுதிகளில் உள்ள 16 லட்சுமிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், 16 ஆண்டுகளுக்கு ஒரு முறை யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த யாத்திரை மூலம் கன்னட – மராட்டிய மக்களின் ஒற்றுமை அதிகரிப்பதே ஆன்மிகத்தின் சிறப்பாகும்.

எப்படி செல்வது?

பஸ்: பெங்களூரில் இருந்து பெலகாவி பஸ் நிலையம், 500 கி.மீ., தொலைவில் உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருந்து பஸ் மூலம் நேரடியாக பெலகாவி பஸ் நிலையத்திற்கு செல்லலாம். அங்கிருந்து, கோவில் 6 கி.மீ., தொலைவில் உள்ளது. ஆட்டோ மூலம் கோவிலை அடையலாம்.

ரயில்: பெங்களூர் மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் பெலகாவியை அடையலாம். ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது. ஆட்டோ அல்லது டாக்சி மூலம் கோவிலை அடையலாம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar