* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும். * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு. * பலனை எதிர்பார்த்து பிறருக்கு உதவி செய்யாதே. * கோயிலின் கோபுரத்தை பார்த்தவுடன் கைகூப்பி வணங்கு. * கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்புலன்களை அடக்கு. * பிறரை குறை கூறுபவரிடம் பழகினால் அந்த குணம் உனக்கும் வரும். * நல்ல எண்ணம் ஒன்றே நல்ல வாழ்க்கையை கொடுக்கும். * சுவாமி சிலைகள் கல், சுதை, ஐம்பொன் என நினைக்காதே. மீறினால் கடவுள் தெரிய மாட்டார். * ஆழ்வார்கள் அருளிய திவ்ய பிரபந்தங்களை படித்தால் புண்ணியம் சேரும். * பிறருக்கு நல்லதை செய்தால் நன்மை தானாகவே தேடி வரும். * உன்னால் முடிந்த உதவியைக் கோயில்களுக்கு செய். * ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை தினமும் சொல். * கடவுளை வணங்குவதை போல் அடியார்களையும் வணங்கு. * பெருமாள்தான் ‘பரம்பொருள்’ என்பதை அறிந்து பக்தி செலுத்து. * கோயிலில் கொடுக்கும் பிரசாதத்தை வேண்டாம் எனச் சொல்லாதே.