Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாவம் தீர வழி சொல்கிறார் ராமானுஜர் மனதில் சந்தோஷம் நிலைக்க சந்தோஷி மாதாவை வணங்குங்கள் மனதில் சந்தோஷம் நிலைக்க சந்தோஷி ...
முதல் பக்கம் » துளிகள்
மனிதன் தெய்வமாகலாம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மனிதன் தெய்வமாகலாம்

பதிவு செய்த நாள்

24 செப்
2026
12:09

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி பிறக்காமல் இருப்பதற்கு என்ன வழி?’’ எனக் கேட்டார். ‘‘நாம் ஏதோ தப்பு பண்ணியிருக்கிறோம். அதற்கு தண்டனையாகத் தான் பிறப்பு எடுத்திருக்கிறோம். செய்த தப்புக்கு இத்தனை கசையடி வாங்க வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது.

இந்த உடம்பின் மூலம் நோய், துன்பம் என்னும் கசையடிகளைப் பெறுகிறோம். இந்த உடம்பு போன பின் எஞ்சிய கசையடிகளைப் பெறவும், இந்த உடம்புடன் செய்த பாவத்திற்கான கசையடிகளைப் பெறவும் மீண்டும் பிறக்கிறோம். அப்போது புதுஉடம்பு கசையடிகளை வாங்கத் தொடங்குகிறது. இப்படி கோபம், காமத்தால் மனிதன் பாவத்தில் ஈடுபடுகிறான். கோபத்துக்குக் காரணம் பற்று. அதாவது ஆசை. மனதில் நிறைய ஆசைகளை வளர்த்துக் கொண்டால் அது பாவத்தில் தள்ளி விடும்.   

 ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
 பற்றுக பற்று விடற்கு’ என்கிறார் திருவள்ளுவர்.

பற்று இன்றி வாழ விரும்பினால் நாம் கடவுளின் திருவடியை கெட்டியாக பற்றிக் கொள்ள வேண்டும். ஆசைக்கு என்ன காரணம்? உலகில் நம்மைத் தவிர, இன்னொன்று உயர்ந்தது என எண்ணும் போது மனதில் ஆசை பிறக்கிறது. உண்மையில் ‘சிவம்’ ஒன்றே எல்லாமாக இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தால் ஆசை, கோபம் ஏற்படாது. ஒரு மாடு கண்ணாடியில் தன்னைக் கண்டால், இன்னொரு மாடு எனக் கருதி முட்டப் போகும். மனிதன் தன் பிம்பத்தைப் பார்த்தால் முட்டுவானா? அதுவும், தானும் ஒன்று எனப் புரிந்து கொண்டு சாந்தமாக இருப்பான். அதுபோலத் தான் உலகமும். நாம் பார்க்கும் எல்லாம் ஒன்றே. இரண்டாவது என்பதே இல்லை என்ற தெளிவு மனதில் இருக்க வேண்டும். அந்த ஞானம் வந்தால் பிறகே துக்கம், பயம் நம்மை விட்டு  நீங்கும். அதன் பின் பிறப்பு உண்டாகாது.  

மிருக நிலையில் இருந்து மனித நிலைக்கும், அதன் பின் தெய்வ நிலைக்கும் உயர வேண்டும். ஆசை, கோபத்தை கைவிட்டால் மனிதன் தெய்வமாக உயரலாம். மனிதனை நல்லவனாக வாழ வைக்கவே சமயங்கள், கோயில்கள் உருவாக்கப்பட்டன’’ என விளக்கினார் காஞ்சி மஹாபெரியவர்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல், நெலமங்களா தாலுகா, பைரஷெட்டிஹள்ளி கிராமம் கொல்லஹள்ளி பகுதியில் பைலாஞ்சநேய சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar