* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய். * தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் சுத்தமாகும். * எதற்கும் பதட்டப்படாதே. நடப்பது நடந்தே தீரும். * முன்னோர்கள் நடந்த பாதையில் நடந்து செல். * உண்மை பாதையில் சென்றால் கடவுளைக் காணலாம். * மனதை அலை பாய விடாதே. அதை ஒரு இடத்தில் நிறுத்து. * நல்லதை செய்யத் தயங்காதே. தைரியமாக அதைச் செய். * உன் வருமானத்திற்கு ஏற்றபடி குடும்பம் நடத்தப் பழகு. * மனதில் அமைதி இருந்தால்தான் சேவையில் ஈடுபட முடியும். * ஒருவருக்கு எவ்வளவுதான் கொடுத்தாலும் மனம் திருப்தி அடையாது. * உன் குடும்பத்தை முதலில் கவனி. பிறகு சமூகத்திற்கு தொண்டு செய். * நல்ல எண்ணத்துடன் செய்யும் செயலுக்கு போட்டி, பொறாமை இருக்காது. * சர்க்கரையில் பல பண்டம் செய்வது போல கடவுளும் பல வடிவில் இருக்கிறார். * குடும்பத்தினரிடம் பாசமாக இருக்கிறாயா... உன் வீட்டில் கடவுள் இருப்பார். * உன் குறையை கடவுளிடம் கூறுவது போல் நிறையையும் சொல். * கடவுள் இசை வடிவானவர். அவரது அருளை இசையாலும் பெறலாம்.