திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே குதக்கோட்டை ஊராட்சி வீரன்வலசையில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.
கடந்த ஜூன் 2 காலை அனுக்ஞை, மகா கணபதி பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று மகாலட்சுமி பூஜை, எந்திர ஸ்தாபனம் உள்ளிட்டவைகள் நடந்தது. இன்று காலை 10:30 மணிக்கு வீரன்வலசையில் உள்ள வீரசக்தி விநாயகர், பத்திரகாளியம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் ராமன் அய்யங்கார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவர்களுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வீரன்வலசை கிராம மக்கள், இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் மகளிர் மன்றத்தினர் செய்திருந்தனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.