இதே புராணத்தில், வேறு வடி வங்களும் பேசப்படுகிறது. முன்னொரு காலத்தில், தேவேந்திரனிடம் போர் தொடுத்தார் மகாபலி சக்கரவர்த்தி. போரில் தோல்வியடைந்த மகாபலி, அனைத்தையும் இழந்து நின்றார். இழந்த நாட்டையும், புகழையும் மீண்டும் பெற விஸ்வஜித் யாகத்தை நடத்தி, தேவலோகத்தையும் பிடித்துக் கொண்டார். அங்கு நுாறு அஸ்வமேத யாகம் செய்ய தொடங்கினார். அது முடிந்தால், தேவலோகமே முடிந்து விடும் என்ற உணர்ந்த தேவேந்திரன், பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனை அணுகி தேவர்களையும், தேவலோகத்தையும் காக்க வேண்டினார்.
திருமாலும் மனமிறங்கி, காஸ்யப - அதிதி தம்பதியினருக்கு மகனாக பிறந்து, மகாபலியை அழிப்பதாக வரமளித்தார். அவ்வாறே அவர்களுக்கு மகனாக பிறந்து பிரம்மச்சாரியாய் வளர்ந்து, வாமன அவதாரம் எடுத்தார். யாகம் பூர்த்தியடைய தானம் வாங்க எல்லோருக்கும் கேட்டதை யெல்லாம் கொடுத்தார். வாமனனாய் வந்த பிராமணச்சிறுவன், தனது காலடியில் மூன்றடி நிலம் கேட்டார். அளந்து எடுத்துக் கொள் என மகா பலி சொல்ல, விஸ்வரூபமாய் திருமால், மண்ணையும் விண்ணையும் அளந்தார்.
மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்றார். வந்திருப்பது திருமாலே என்றுணர்ந்த மகாபலி, மூன்றாவது அடி என் சிரசே என தன் தலையை கொடுத்தார். வாமனனும் தனது கால் பதித்து, மோட்சம் அளித்தார். தேவர் களுக்கு தேவலோகத்தை மீட்டுக் கொடுத்தார். இந்த மகிழ்வான நாளை கேரளாவில் ஓணம் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.