Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 4,389 அடி உயர மலை மீது சிடிலு ... மார்கண்டேயரின் பிறந்த நாளை கொண்டாடும் கோவில் மார்கண்டேயரின் பிறந்த நாளை ...
முதல் பக்கம் » துளிகள்
குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் ஜலகண்டேஸ்வரர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் ஜலகண்டேஸ்வரர்

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2026
09:06

‘சிலிகான் சிட்டி’ பெங்களூரு ஐ.டி., சிட்டி மட்டுமல்ல. வரலாற்று சிறப்பு மிக்க புராதன கோவில்களின் நகர் என்றாலும் மிகையில்லை. பெங்களூரில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கோவில்கள் உள்ளன. பெங்களூரில் பனசங்கரி கோவில், சோமேஸ்வரர் கோவில், காடு மல்லேஸ்வரர், பிளேக் மாரியம்மன் கோவில் உட்பட, பல்வேறு கோவில்கள் புராதன பிரசித்தி பெற்றவை. இவற்றில் ஜலகண்டேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். அற்புதமான இக்கோவில் 2,000 ஆண்டுகள் பழமையானது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

சோழ மன்னர்கள் அதேபோன்று, பெங்களூரின் கலாசிபாளையாவில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலும், சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாக, புராணங்கள் கூறுகின்றன. அதன்பின் ஆட்சிக்கு வந்த கெம்பேகவுடா, கோவிலுக்கு திருப்பணிகள் செய்து சீரமைத்தார். கோட்டையின் மத்திய பகுதியில் இருப்பதால், கோட்டை ஜலகண்டேஸ்வரர் என பக்தர்கள், அழைக்கின்றனர்.

கோவிலின் கர்ப்பகிரஹத்தில் சிவன், பார்வதி தேவி மற்றும் கைலாசநாதர் என, மூன்று தனித்தனி சிலைகள் உள்ளன. கலாசிபாளையா பஸ் நிலையம் அருகில் இக்கோவில் அமைந்துள்ளது. தினமும் பெருமளவில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். வெளியூர்களில் இருந்தும் வருகின்றனர்.

ஜலகண்டேஸ்வரர் மற்றும் பார்வதி தேவியை தரிசனம் செய்தால், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பிரச்னைகள் நீங்கும். வாழ்க்கையில் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமண வரம் கிடைக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாகும். பெங்களூருக்கு வரும் பலரும், இக்கோவிலை தரிசனம் செய்கின்றனர். ஆண்டு தோறும் திருவிழா நடத்தப்படுகிறது. வாரந்தோறும் திங்கட் கிழமை, பிரதோஷம், பவுர்ணமி போன்ற சிறப்பு நாட்களில், பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும்.

எப்படி செல்வது?


மெஜஸ்டிக்கில் இருந்து மூன்று கி.மீ., மல்லேஸ்வரத்தில் இருந்து, ஆறு கி.மீ., யஷ்வந்த்பூரில் இருந்து 9 கி.மீ., சிவாஜி நகர், எம்.ஜி., சாலையில் இருந்து, நான்கு கி.மீ., தொலைவில் கலாசிபாளையா உள்ளது. பெங்களூரின் அனைத்து பகுதிகளில் இருந்தும், கலாசிபாளையாவுக்கு பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. வாடகை கார், ஆட்டோ வசதியும் உள்ளது.

தரிசன நேரம்: காலை 5:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை

தொடர்பு எண்: 96636 00619

அருகில் உள்ள கோவில்கள்: தர்மராய சுவாமி கோவில், கோட்டை வெங்கடரமண சுவாமி கோவில், அய்யப்ப சுவாமி கோவில், ராஜராஜேஸ்வரி நகர், ரங்கநாதசுவாமி கோவில், சாய்பாபா கோவில்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar