திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில், இன்று தைலக்காப்பு, திருக்கல்யாண மகோற்சவம் துவங்குகிறது.இன்று மாலை 4 மணிக்கு ஆண்டாள் பெரிய சன்னதி எழுந்தருளுகிறார்.நாளை காலை 8 மணிக்கு ஆண்டாள் தைலக்காப்பு மண்டபத்தில்எழுந்தருளி, திருவீதி உலா நடைபெறும். தொடர்ந்து, தைலக்காப்பு, ஆண்டாளுக்கு நவகலச அலங்கார சவுரி திருமஞ்சனம் நடைபெறும். அடுத்த நாட்களில் தொடர்ந்து, உச்சிக்கொண்டை சேவை, முத்துக்குறி நடைபெற்று, ஜன.,28ல் இரவு 9.22 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறும்.