திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மாசித்திருவிழா: பிப்.7ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2013 11:01
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கோட்டைமாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.7ல் துவங்குகிறது.பிப்.7 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பூ அலங்காரத்துடன் திருவிழா துவங்குகிறது.பூச்சொரிதல்: பிப்.8 காலை 9 மணிக்கு பூச்சொரிதல் விழாவும், பிப்.10ல் இரவு 8 மணிக்கு சாட்டுதலும், பிப்.12 பகல் 12 மணிக்கு கொடியேற்றமும், பிப்.15 மதியம் 2மணிக்கு நாகல்நகர் புறப்பாடும் நடக்கிறது.பிப். 21ல் அங்குவிலாஸ் மண்டகப்படியும், பிப்.22 மாலை 4.30 மணிக்கு பூக்குழியும், இரவு 8 மணிக்கு அம்மன் தேர்பவனியும் நடக்கிறது. பிப்.23ல் இரவு 10 மணிக்கு தசாவதாரம், பிப்.24 காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டுதல், மாலை 5 மணிக்கு கொடியிறக்கம், பிப்.25ல் இரவு 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், பிப்.26ல் செவ்வாய் மாலை 6 மணிக்கு தெப்ப உற்சவமும் நடக்கிறது. மண்டகப்படிதாரர்கள் அம்மன் வீதி உலா இரவு 7 மணிக்கு ஆரம்பித்து, இரவு 12 மணிக்கு முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தினமும் இரவு 9 மணிக்கு கோயில் கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.விழா ஏற்பாடுகளை நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முகமுத்தரசப்பன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.