Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நலம் காக்கும் நல்லூர் நாயகன் அழகே உருவான நல்லூர் கோவில் அழகே உருவான நல்லூர் கோவில்
முதல் பக்கம் » துளிகள்
அதிகார நந்தியை வணங்கி அருள்பெருவோம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அதிகார நந்தியை வணங்கி அருள்பெருவோம்!

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2026
11:06

சிவபெருமானை நோக்கியபடி அமைந்துள்ள அதிகார நந்தியின் தோற்றமே, மிகவும் பழமையானது என்பதை அறியலாம். பலி பீடத்துடன் கூடிய, மண்டபம் சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அம்மனுக்கு முன்பாகவும், ஒரு அதிகாரநந்தி, கல் மண்டபத்தில் ஒய்யாரமாக படுத்துள்ளது போல் காட்சியளிக்கிறது. ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் சன்னதியின் நேர் எதிரில், இரண்டு கால் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

ராஜகோபுரத்துக்கு நேராக, வந்து, கொடிமரத்தை வணங்கி, விநாயகரை பணிந்து, அதிகார நந்தியின் அனுமதியை பெற்று, உள்ளே சென்றால், ‘மூர்த்தி சிறிதாயினும், கீர்த்தி பெரிது,’ என்பதை உணர்த்துவது போல், தனி சன்னதியில் விஸ்வேஸ்வர சுவாமி மூலாலய மூர்த்தியாக காட்சியளிக்கிறார். சிவசூரியன், சிவசந்திரன் மற்றும் நால்வர் பெருமக்களை சேவித்த பின், எல்லாம்வல்ல எம்பெருமானை சேவிக்கலாம். உள்ளேயும், சிறிய நந்திவாகனங்களும், முருகருக்கு முன் மயில் வாகனமும், மூலவர்களை நோக்கி தவம் இருப்பது போல் காட்சியளிக்கின்றன.

நல்லுாருக்கு வாங்க... நலமுடன் வாழுங்க!

நல்லுாரில் அமைந்துள்ள எல்லாம்வல்ல எம்பெருமானாகிய ஸ்ரீவிசாலாட்சி அம்பிகை சமேத ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி திருக்கோவிலில், எம்பெருமானுக்கு உமையானவள் வலப்பாகம் பெற்றுள்ள காரணத்தால், கோவிலில் பெண் பார்க்கும் நிகழ்வு நடக்கும் பட்சத்தில் திருமணம் கை கூடும் என்பது ஐதீகம். இதேபோல், கோவிலில் நடைபெறும் ஐப்பசி அல்லது கார்த்திகை மாதம் நடக்கும் கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு மனதார வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

சரபஷே்வரரை பிரதிவாரம், ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும், பவுர்ணமி நாளில், மாலை, 6:00 மணிக்கு நடக்கும் பூஜைகளில் பங்கேற்று வழிபட்டால், நீண்டகால கோர்ட் வழக்குகளுக்கு விரைவில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. இத்திருக்கோவிலில் உள்ள பைரவரை அஷ்டமி தினத்தில் வணங்குவதால் பில்லி, சூனியம் போன்றவைகள் மற்றும் கர்ம வினைகள் நீங்கும் என்பது ஐதீகம்.


– நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் சிவாச்சார்யார்கள்.

மஹா கும்பாபிஷேகம்


கல்வெட்டு ஆதாரங்களுடன் கி.பி 1713ம் நுாற்றாண்டைச் சார்ந்த இத்திருக்கோவில், காலப்போக்கில் மிகவும் சிதிலமடைந்து விட்டது. இத்திருக்கோவிலை, திருப்பூரைச் சேர்ந்த பக்தரும் ஆன்மீகச் செல்வருமான திருவாளர் குருவாயூர் நடராஜன், திருப்பணி செய்யத் தொடங்கி பல பணிகளை செய்தார். அவர், 1992ம் ஆண்டு இத்திருக்கோவில் திருப்பணியை திருப்பணி குழுவினர் சிலருடன் இணைந்தும் மற்றும் அன்பர்கள் ஊர்பொதுமக்கள் சிலர் ஒத்துழைப்புடன் சேர்ந்து திருக்கோவில் பணிகளை முடித்து கடந்த 2,000 ஆண்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஹிந்து அறநிலையத்துறை ஆளுகைக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு வட்டம் மாரியம்மன், விநாயகர் திருக்கோவில் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. கடந்த 2022ல், தனி செயல் அலுவலர் நியமனம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
இதற்கு முன் கோவிலில் பணியாற்றிய செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் நல்லுார் நாச்சிமுத்து ஆகியோரின் முயற்சியால், எட்டு ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் திருப்பணிகள் துவங்கப்பட்டு,  2023 பிப். 1ம் தேதி மீண்டும் இத்திருக்கோவிலில் கும்பாபிஷேகம் வெக விமரிசையாக நடைபெற்றது.

ஆனித் திருத்தேர் திருவிழா (பிரம்மோற்சவம்)

இத்திருக்கோவிலில் திருத்தேரோட்டம் ஆனி (பிரம்மோற்சவம்) திருக்கோவிலின் பிரதான திருவிழாவாக வருடம் தோறும் ஆனி மாதம் வரும் பௌர்ணமி தினத்தன்று திருத்தேரோட்டம் நிகழ்வு நிச்சயிக்கப்பட்டு, 13 நாட்கள் உற்சவமாக கொடியேற்றத்துடன் துவங்கி வெகு சிறப்பாக பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்களில் காலை, மாலை என இரு நேரங்களிலும் யாகசாலை பூஜைகளும் நடக்கின்றன.
காலை அருள்மிகு சந்திரசேகரர் – மனோன்மணி அம்பாள் திருவீதி உலா புறப்பாடும், மாலை சோமாஸ்கந்தர் சுவாமி திருவீதி உலா புறப்பாடும் என இரு நேரங்களிலும் சுவாமி புறப்பாடுகள் பக்தர்கள் படைசூழ வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

முக்கிய திருவிழா நாட்கள்

பஞ்சமூர்த்தி புறப்பாடு, திருக்கல்யாண உற்சவம்ஆகிய நாட்களில், பக்தர்கள் கூட்டம் மிக்க திருவிழாவுடன் துவங்கி அடுத்த நாள் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடக்கும்.  தேரோட்டம் முடிந்து, வண்டித்தாரை,  அதனைத் தொடரும்  நாட்களில் மஞ்சள் நீர் விளையாட்டு உற்சவம் என , தேர்த்திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.

ஆனித்திருத்தேரின் சிறப்பு

ஆனத்திருமஞ்சனம் நடக்கும், ஆனி மாதத்தில் சிவ பெருமானுக்கு தேர்த்திருவிழா கொண்டாடப்படுகிறது. தேவலோகத்தில் உள்ள தேவர்களுக்கு, மாலை நேரமாக ஆனிமாதம் கருதப்படுகிறது. உத்தராயண புண்ணிய காலத்தின் கடைசிமாதமாக ஆனி மாதம் திகழ்கிறது. ஆனிமாதம் நடக்கும், சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்தில், நடராஜப்பெருமானே, திருத்தேரில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். அதேபோல், ஆனிமாதம் நடக்கும் நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலில் நடந்த முதல் தேர்த்திருவிழாவில், ஸ்ரீநடராஜர் – சிவகாமியம்மன் திருவீதியுலா வந்து தரிசன காட்சி அருளிய போல், வான்மழை பெய்து, வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தேரோட்டம் கோலாகலம்

திருக்கோவிலில் அறங்காவலர் குழு பதவி ஏற்றவுடன், 300 ஆண்டுகளுக்கு பின் புதியதாக மரத்தேர் ஒன்று செய்ய உத்தேசிக்கப்பட்டது. பக்தர்கள் பங்களிப்புடன், 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மரத்தேர்கள் செய்யப்பட்டன. சோமாஸ்கந்தர் மற்றும் விநாயகர் தேர் பணி முடிந்து, தேர் வெள்ளோட்டமானது கடந்த 2025 ஏப். 30ம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, 2025 ஜூலை 7ம் தேதிமுதன்முறையாக திருத்தேரோட்டமானது, ஊர் பொதுமக்கள் கூடி, அறங்காவலர் குழுவினரின் முன்னிலையில், மிகச் சிறப்பாக நடந்தது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar