* தர்மம் செய்தால் பணமும் சேரும். சிறப்பும் வரும். * அறிவு என்னும் அங்குசத்தால் புலன்களை அடக்குபவரே மோட்சம் அடைவர். * வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தர்மம் செய். * மனத்துாய்மையுடன் இரு. இதுவே சிறந்த அறம். * உயிர்களிடம் இரக்கம் காட்டுபவரே உயர்ந்தவர். * உயிரைக் கொல்லாமலும், மாமிசம் சாப்பிடாமலும் இருப்பவரை கண்டால் உயிர்கள் கைகூப்பி வணங்கும். * தவம், தானம் செய்பவரை விட உண்மை பேசுபவர் உயர்ந்தவர். * நீரால் உடல் சுத்தமாகும். உண்மை பேசுவதால் மனம் சுத்தமாகும். * துன்பத்தை பொறுப்பதும், பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பதும் தவம். * பொருளின் மீது பேராசைப்படுவதாலேயே உனக்கு பிறப்பு ஏற்படுகிறது. * ஆசை இல்லாதவர் கடவுள். அவரது திருவடியை ஆசையாக பிடித்துக் கொள். உன் ஆசை காணாமல் போகும். * பசித்த பின் சாப்பிடு. நோய் என்பதே வராது. * உனக்கு என்ன விதிக்கப்பட்டுள்ளதோ, அதையே நீ அனுபவிக்கிறாய்.