* கடவுளை நம்பினோர் கைவிடப்படார். இதுவே பக்தி. * நம் இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை. தெய்வத்தின் இஷ்டப்படியே நடக்கிறது. * ஒருவன் தனக்கு தானே நட்பானால் உலகமே நட்பாகி விடும். * முயற்சியில் தவறு ஏற்படுவது இயல்பு. அதை திருத்திக் கொள். * ஒழுக்கம் இல்லாத தெய்வ பக்தி வெறும் வெளிவேஷம். * பிற உயிர்களிடம் அன்பு காட்டு. உன் சக்தி வளரும். * மனதை கட்டி ஆள்வதற்கு மந்திரத்தை உச்சரிப்பதே வழி. * அருமையான உள்ளக் காட்சிகளை எளிய நடையில் தருவதுதான் நல்ல கவிதை. * நமது எண்ணத்தை மீறியும் காலசக்தி வேலை செய்கிறது. * பிறருக்கு வயிறு நிறைய உணவு தருவதுதான் உயர்ந்த தர்மம். * பாட்டுக்கு தாளமே ஒழிய தாளத்திற்குப் பாட்டில்லை. * காதல், திருமணம், தாலாட்டுப்பாடல்கள் நின்றுவிட்டால் சுடுகாடுதான் மிச்சமிருக்கும். * உலக நாகரிகங்களை காட்டிலும் நம் ஹிந்து தர்மம் அதிக சக்தி கொண்டது. * எதிலும் பற்றில்லாமல் செயல்படு என்பதையே ஹிந்து தர்மம் சொல்கிறது. * கவிதை எழுதுபவன் கவிஞன் அல்ல. கவிதையாக வாழ்பவனே கவிஞன்.