* நிம்மதியாக வாழ குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இரு. * அமைதியை விட உயர்ந்த மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை. * அதிகமாக பேசினால் மட்டும் ஒருவன் அறிஞன் ஆகி விடமாட்டான். * நல்ல எண்ணத்துடன் ஒருவன் செயல்பட்டால் அவனை மகிழ்ச்சி பின்தொடரும். * புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் அறிவாளி அசைந்து கொடுக்க மாட்டான். * புதிதாக கறந்த பசும்பாலை போல பாவச்செயல்கள் உடனேயே புளிப்பாவதில்லை. எதற்கும் ஒரு காலமுண்டு. * நீ செய்யும் ஒவ்வொரு செயலும், உன்னை நிழல் போல் தொடரும். * வெளிப்படையாகப் பேசு. முடியாவிட்டால் அமைதியாக இரு. * பொற்காசுகள் மழையாகப் பொழிந்தாலும் ஆசைகள் அடங்காமல் பெருகும். * பேச்சளவில் தர்மம் எனச் சொல்லி விட்டு அதை செய்யாதவர், வாசனை இல்லாத மலருக்கு சமம். * பிறப்புக்கு காரணம் எதுவோ, அதுவே இறப்புக்கும் காரணம். * கேட்டதை எல்லாம் எதையும் நம்பாதே. * ஆசையை வென்றவரை எவராலும் வெல்ல முடியாது.
* உன் விடுதலைக்கு வழி பிறரிடம் இல்லை. உன்னிடமே உள்ளது.