* கிடைத்ததை ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம். * நல்ல செயல்களை செய்தால் நல்லது நடக்கும். * கடவுளிடம் சரண் அடைவதே உயர்ந்த விஷயம். * பொதுநலத்துடன் இருப்பதே கடவுளை அடையும் வழி. * கடவுளின் திருவடி மட்டுமே உண்மையான மகிழ்ச்சியைத் தரும். * மூச்சுள்ள வரை உன்னை நினைக்க வேண்டும் என கடவுளிடம் வரம் கேள். * ஒளி இருந்தால் உலகத்தை பார்க்கலாம். ஞானம் இருந்தால் கடவுளை பார்க்கலாம். * சமையல் செய்ய நெருப்பு தேவை. மோட்சம் பெற ஞானம் தேவை. * ஐம்புலன்களை கட்டுப்படுத்தினால் மனம் கட்டுப்படும். * எல்லாம் நானே, அனைத்தும் எனது பொருள் என நினைத்தால் துன்பப்படுவாய். * பயனில்லாத ஒரு சொல்லைக் கூட சொல்லாதே. * கஞ்சனாக இருக்காதே. மீறினால் உன்னிடம் உள்ள நல்ல குணம் அழியும். * வறுமையும், செல்வமும் விருந்தினர் போல தற்காலிகமானது. * தீய ஆசைகளை ஒழிக்க நல்லவர்களிடம் நட்பு கொள். * எப்போதும் சந்தோஷமாக இருப்பவனே உயர்ந்த மனிதன். * உழைப்பால் கிடைத்த செல்வமே மதிப்பு மிக்கது.