* நல்லவருடன் பழகு. உன் மனம் துாய்மை பெறும். * சம்பாதித்ததை பிறருக்காக செலவு செய்து சந்தோஷப்படு. * கடவுளை வெளியில் தேடாதே. அவர் உனக்குள்ளேயே இருக்கிறார். * பக்தி செய்வதே கடவுளை அடைய எளிய வழி. * கடவுளிடம் முறையிட்டால் பாவம் நீங்கும். * கற்பக விருட்சம் போல வாரி வழங்கும் வள்ளல் கடவுள். * ஆணவம் இருக்கும் வரை கடவுளை நெருங்க முடியாது. * பசுவைத் தேடும் கன்று போல, கடவுளை அடைய முயற்சி செய். * வேண்டியவர், வேண்டாதவர் என பாரபட்சம் கடவுளுக்கு கிடையாது. * பெண்கள் அனைவரும் ஆதிபராசக்தியின் அம்சம். * அமைதியே ஞானத்தின் முதல் அடையாளம். * எந்த நிலையிலும் கலங்காதவனே ஞானி. * எல்லா ஞானிகளின் உபதேசமும் ஒரே கருத்தையே உணர்த்துகின்றன. * அன்புக்கும், அறிவுக்கும் சமபங்கு கொடு. மனச்சமநிலையை இழக்க மாட்டாய். * உண்மை எது, பொய் எது என பிரித்தறிய பழகு. * விடாமுயற்சி உள்ளவனுக்கு உலகில் எதுவும் சாத்தியமே. * தியானம் கைகூட உருவ வழிபாடு உதவி செய்யும்.