* முன்னேற நினைக்கிறாயா... கடவுளை நம்பு. * கடவுளை அறிவது ஒன்றே வாழ்வின் நோக்கம். * நம்மை இயக்கும் சூத்திரதாரி கடவுளே. அவர் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவர். * பொறுமை, நம்பிக்கையுடன் கடவுளை வேண்டு. நிச்சயம் உதவி செய்வார். * பிறருக்கு உதவி செய். துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவாய். * ரகசியம் என எதுவும் கிடையாது. அனைத்தையும் கடவுள் அறிவார். * ஆணவம் இல்லாமல் அக்கறையுடன் சேவை செய். * எளிமையாக வாழ பழகு. அதில்தான் நிம்மதி உள்ளது. * பிறர் என்ன நினைப்பார்கள் எனக் கவலைப்படாதே. நல்ல எண்ணத்துடன் இரு. * பதிலுக்கு பதில் சொல்லாதே. விட்டுக்கொடுத்துச் செல். * உண்மை எது, உண்மையற்றது எது என்பதை அறிந்து கொள். * குழந்தைகளையும், பெண்களையும் அன்புடன் நடத்து. * உடம்பைக் கவனி. ஆனால் அதிகமாக பராமரிக்காதே. * வழிபாட்டுக்கு ஆடம்பரம் தேவையில்லை. * பணிவும், அன்பும் நிறைந்த மனதையே கடவுள் எதிர்பார்க்கிறார். * செய்த வினைகளை நீயே தான் அனுபவிக்க வேண்டும். * தர்மம் செய். அதிர்ஷ்டம் தேடி வரும்.