* எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ, அவ்வளவு குறைவாகப் பேசு. * நல்ல மனதுடன் இருந்தால் எல்லாம் உன் வசமாகும். * கடவுளை வணங்கு. எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார். * கடந்த காலத்தை நினைத்து வருந்தாதே. எதிர்காலத்தை எண்ணி பயப்படாதே. * நமக்குத் தேவையான அனைத்தும் கடவுளிடம் உள்ளன. * நல்லவர்களின் பேச்சு மனதிற்கு ஆறுதல் தரும். * நல்லவர்களின் வாழ்வே நமக்கான படிப்பினை. * கடவுளின் அருள் எப்போதும் இருக்கிறது. சிலர் அதை உணர்வதில்லை. * கஷ்டம் வந்தால் அதை வரமாக கருது. காரணம் உன் பாவம் தொலைகிறது. * கடமையைச் செய். பலனைக் கடவுளிடம் ஒப்படைத்துவிடு. * எதிலும் ஆர்வமுடன் இரு. முன்னேற்றம் நிச்சயம் வரும். * இக்கட்டான சூழ்நிலையில் அமைதியுடன் இரு. தீர்வு கிடைக்கும். * பிறருடன் வாக்குவாதம், சண்டையில் ஈடுபடாதே. * மனசாட்சிக்குக் கட்டுப்படு. அது சொல்வதைக் கேள். * எப்போதும் சந்தேகப்படாதே. மீறினால் நிம்மதி போகும். * உன் நியாயமான எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்.