Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுப்பட்டினம் புனித ஆசிர்வாதப்பர் ... தன்வந்திரி அலங்காரத்தில் திருவதிகை சரநாராயண பெருமாள்; வரும் 14 ம்தேதி அருள்பாலிப்பு தன்வந்திரி அலங்காரத்தில் திருவதிகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பாசேத்தியில் நேர்த்திக்கடன் அரிவாள் தயாரிப்பு பணிகள் தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பாசேத்தியில் நேர்த்திக்கடன் அரிவாள் தயாரிப்பு பணிகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2026
05:07

திருப்பாச்சேத்தி: திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் ஆடி மாதம் பிறக்க உள்ளதையடுத்து நேர்த்திக்கடன் அரிவாள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.


திருப்புவனம் திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் பழைய இரும்புகளை பயன்படுத்தி அரிவாள், மண்வெட்டி, கோடாரி, கடப்பாரை உள்ளிட்ட விவசாய கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. விவசாயத்தில் இயந்திரங்கள் வருகைக்கு பிறகு தொழில் நலிவடைந்து வந்த நிலையில் தற்போது நேர்த்தி கடன் அருவா தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அய்யனார் மற்றும் கருப்பண்ணசாமி கோயில்களில் நேர்த்திகடன் விரதமிருக்கும் பக்தர்கள் கோயில்களுக்கு ஒரு அடி முதல் 25 அடி உயர அரிவாள் வரை காணிக்கையாக வழங்குகின்றனர். இதற்கான அருவா தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தென் மாவட்டங்களில் மட்டும் நேர்த்தி கடன் அருவாக்கள் பக்தர்கள் வாங்கி வந்த நிலையில் தற்போது வட மாவட்டங்களான அரியலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் நேர்த்திகடன் அரிவாள் வாங்கி சென்று கோயில்களுக்கு காணிக்கை செலுத்தி வருகின்றனர். திருப்பாச்சேத்தியில் ரவி என்பவர் அரியலூர் மாவட்ட கோயிலுக்காக 25 அடி உயர அரிவாள் வேலைப்பாட்டுடன் தயாரித்துள்ளார். 


திருப்பாசேத்தி ரவி ஆசாரி கூறுகையில்; 25 அடி உயர அறிவாளின் எடை 500கிலோ, 15நாட்களில் மூன்று பேர் சேர்ந்து இந்த அரிவாள் தயாரித்துள்ளோம், அரிவாளின் நுனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெண்கல மணிகள் பொருத்தப்பட்டுள்ளன. சிமெண்ட் தளத்தில் நிலை அரிவாள் வண்ணம் கைப்பிடி உள்ளிட்ட பகுதிகளில் துளையிட்டுள்ளோம். நேர்த்தி கடன் அரிவாள் தயாரிக்க ஒரு அடி நீளத்திற்கு ஆயிரம் முதல் மூவாயிரம் ரூபாய் வரை அரிவாளின் எடைக்கு ஏற்ப மாறுபடும். இந்த அரிவாள் 80 ஆயிரம் ரூபாயாகும், மதுரையில் இருந்து பழைய இரும்புகளை வாங்கி வந்து உருக்கி தட்டி தட்டி அருவா தயாரிக்கப்படுகிறது, விவசாய கருவிகள் வாங்க ஒருசிலர் மட்டுமே வருகை தருகின்றனர். ஆடி மற்றும் மாசி மாதங்களில் நேர்த்திகடன் அரிவாள் தயாரிக்க ஆர்டர் வரும், மற்ற நாட்களில் வேலை இருக்காது, என்றார். ரவி பட்டறையில் மதுரை அழகர்கோயில் 18ம் படி கருப்பண்ண சாமிக்கும், அரியலூர் மாவட்டத்திற்கும் அரிவாள் தயாரித்து வைத்துள்ளார். ராட்சத அருவாக்களை பார்த்து பொதுமக்கள் பலரும் வியந்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar