Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : ஆனி ராசி பலன்  ரிஷபம் : ஆடி ராசி பலன் ரிஷபம் : ஆடி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மேஷம்: ஆடி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேஷம்: ஆடி ராசி பலன்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2026
11:07

மேஷம்:


அசுவினி: உழைப்பாலும், சுய முயற்சியாலும் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது மனதில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவார். பிள்ளைகளால் சிலருக்கு நெருக்கடி ஏற்படும். பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட விவகாரம் நீடிக்கும். உறவுகளுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். எந்த ஒன்றிலும் நிம்மதி இல்லை என்ற நிலை உருவாகும் என்றாலும், லாப ஸ்தானத்தில் யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால் தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட மந்த நிலை நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு தொடர்பு ஆதாயம் தரும். தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் மாதம் முழுவதும் வக்கிரமாக சஞ்சரிப்பதும், ஆக.9 வரை குரு அஸ்தமன நிலையை அடைந்திருப்பதும் எதிர்பாராத நெருக்கடி, சங்கடங்களை ஏற்படுத்தும். உங்கள் செயல்களில் தடை, தடுமாற்றம் உண்டாகும். யோசிக்காமல் சில வேலைகளில் இறங்கி அவதிக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போகும் என்பதால், ஒவ்வொரு வேலையிலும் நிதானமாகவும் செயல்படுவது நல்லது. முடிந்தவரை குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது சங்கடங்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். விவசாயிகளுக்கு மாதத்தின் பிற்பகுதி யோகமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை எடுப்பது நல்லது.


சந்திராஷ்டமம்: ஜூலை 23, 24.

அதிர்ஷ்ட நாள்: ஜூலை 16, 18, 25, 27. ஆக. 7, 9, 16.

பரிகாரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட நன்மை உண்டாகும்.


பரணி: அதிர்ஷ்ட வாய்ப்பிற்காக காத்திருக்காமல் சுய உழைப்பால் முன்னேற்றம் அடையும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் ஆக.1 வரை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவைக்கேற்ற வருமானம் வரும். திட்டமிட்ட வேலை நடந்தேறும். வியாபாரம், தொழில் வளர்ச்சி அடையும். கணவன், மனைவிக்குள் இணக்கம் இருக்கும். பொன் பொருள் சேரும். பணியாளர்களுக்கு வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும் என்றாலும், ஆக.2 முதல் சுக்கிரன் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன், ஆத்மகாரகன் சூரியனும் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிரி தொல்லையும், உடல் பாதிப்பும், மனதில் சங்கடமும், நோயும் சிலருக்கு உண்டாகும். ராசிநாதனும் தைரிய காரகனுமான செவ்வாய் ஆக.2 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக செயல்படக்கூடிய நிலை உருவாகும். எந்த ஒன்றாக இருந்தாலும் அதில் முதலிடத்தில் இருக்க முடியும். உடன் பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். தொழில் நிறுவனம் நடத்துபவர்களுக்கு பணியாளர் ஒத்துழைப்பு ஏற்படும். ஆக. 1 முதல் புதன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். எதை எப்படிச் செய்ய வேண்டும், எதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் உருவாகும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். யோகக்காரகன் ராகுவின் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் இருந்து கொண்டிருக்கும். சிலருக்கு சொத்து சேரும். வயதானவர்களுக்கு நிம்மதியான நிலை உருவாகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை ஏற்படும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 24, 25.

அதிர்ஷ்ட நாள்: ஜூலை 15, 18, 27. ஆக. 6, 9, 15.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட சங்கடம் விலகும்.


கார்த்திகை 1ம் பாதம்: பிறந்த இடம் எதுவாக இருந்தாலும் வாழும் வாழ்க்கையை மேலானதாக மாற்றிக் கொள்ளும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி  யோசித்து செயல்பட வேண்டிய மாதமாகும். ஆத்ம காரகன் சூரியன் மாதம் முழுவதும் நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களையும் அறியாமல் மனதில் பயம் மேலோங்கும். எதிரிகளால் தொல்லை உண்டாகும். நெருக்கடி அதிகரிக்கும் என்றாலும், ராசிநாதன் செவ்வாய் ஆக. 2 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தி உங்களுக்கு உண்டாகும். எடுக்கின்ற முயற்சி யாவும் வெற்றியாகும். ஆரோக்கியம் சீராகும். வம்பு வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும். அதிர்ஷ்டக்காரகன் ராகுவும் மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கையில் பணம் இருந்து கொண்டிருக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். சேமிப்பு உயரும். உழைப்பாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் நிம்மதியும், நவீன பொருட்களின் சேர்க்கையும் இருக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் இருக்கும். பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை அதிகரிக்கும். உடல் நிலையில் அவ்வப்போது சில சங்கடம் தோன்ற வாய்ப்பு இருப்பதால், நோய் வரும்போதே சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.  சிலருக்கு  சொத்து சேரும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பதும், தவறான நண்பர்களை விட்டு விலகுவதும் மாணவர்களுக்கு நன்மை தரும். 


சந்திராஷ்டமம்: ஜூலை 26

அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 19, 27, 28. ஆக. 1, 9, 10

பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட்டு வர சங்கடம் விலகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar